மின்னல் வீசும் உன் கண்களை
காணுகையில் - என்
எண்ணங்களில் ஒரு தடுமாற்றம்,
புன்னகை புரியும் உன் முகத்தை
காணுகையில்-என்னுள்
ஆனந்த ஊற்று,
அன்பான உன் உள்ளம்
காணுகையில்- நான்
உன்னுள் உறைகிறேன்,
நீ எனக்கு தரும் பாசமும் நேசமும்
உன்னுள் நான் சிறைபடுகிறேன்.
அன்பே...........
உன் அன்புக்கு என்றும் நான் அடிமை.



கற்பனைத் தந்திகளை மீட்டுகையில்
கானமென இசைமீட்டிடும்
கவிதை நீயெனக்கு....

என் மூச்சுக் காற்றில் கலந்து
இதயத்தோடு கலந்து சில்மிஷம்
செய்திடும் உயிரும் நீ...

கண்மூடி திறக்கையில்
நிழலாடி வரும் உன் உருவம்
காண்கையில் காணமல் போகின்றது
கண்களில் கண்ணீர்த் துளிகள்...

தித்திக்கும் கனவுகளில் திகட்டாமல்
கண்சிமிட்டிச் செல்லும் கண்மணியே
கண்களைத் தீண்டி கனவோடு கலந்து
உயிருக்குள் நுழைந்து விட்டாய்...

உன் கண்ணீர் துடைத்திட
என் கரங்கள் இல்லை
உன்னருகில்....

உன் இதயத்தின் சோகங்கள்
நீக்கி தோளோடு தோள்
கொடுக்க நான் இல்லை
உன்னருகில்....

உன் கண்களில் கரைந்தோடும்
கண்ணீரில் கரைகின்றது
என் நிமிடங்கள்....

காதலியே உன்னருகில்
நான் இல்லை என்னருகில்
நீ இல்லை....

என் அன்பென்றும் உன்னையே
சுற்றி வட்டமிடும் பூமியைச்
சுற்றும் நிலவாய்...

என் மனக்கண் உன்னையே
நோக்கும் என்றென்றும்...

உன் மனம் தாங்கும் சோகங்கள்
என் இதயத்தைச் சேரட்டும்
உன் சோகங்கள் கரையட்டும்...

தண்டை நீங்கி வாழாத மலராய்
நம் காதலின்றி வாழாது என்
இதயம்....

உருண்டோடும் உலகத்தில்
ஓவ்வொரு உயிர்களிலும்
துளிர்விடும் அன்பின் மேல்
ஆணையாய் உன் மீது நான்
கொண்ட காதல் என்னுடல்
கல்லறை சென்றாலும் மாறாது
என்னுயிர் காதலியே..

உன் சோகங்கள் கலைந்திடு
நாளை விடிந்திடும் விடியலில்
பறவைகள் சந்தோஷ கானம் பாடிட
மலர்களைனைத்து பூமாலை தொடுத்திட
இதமாய் வீசிடும் தென்றலில்
துன்பங்கள் பறந்திட உன் வாழ்வில்
இன்பங்கள் புத்துயிர் பெறட்டும்....


என்னைப் புரியும் நிலையில்
எப்போதும் நீ இருந்ததில்லை
நீ என்னைப் பிரியும் நிலைக்கு
இதுவும் ஓர் காரணம்
முன்கூட்டியே எழுதப்பட்ட
உன் தீர்ப்பால்
விசாரணையின்றி தண்டிக்கப்பட்டேன்
என்னை விட்டு விலகி
வெகுதூரம் சென்று விட்டாய்
பழகி விடும் உனக்கு
என் நினைவின்றியும் ஜீவிக்க
இப்போதேனும் சொல்லி விட்டுப் போ
நீயும் என்னை நேசித்தாயா?

இகம் மறந்து
அகம் நிறைந்து
உன்னை ஆராதித்தது
என்னை விலகச் சொன்ன
உன் விஷ வார்த்தைகளுக்கா?

அவை என் செவி சேர்ந்த
மறு நொடியில்
முகம் மறந்து,
முகவரி மறந்து,
முழுப்பித்தனாய்
அலைந்தாலும்.......

வீடு மறந்து
வேலை மறந்து
நான் யாரென்பதை
நானே மறந்து
சித்தம் கலங்கித் திரிந்தாலும்.......

சிறுபிள்ளை
துலக்கி வைத்த
பாத்திரத்தில் ஒட்டியிருக்கும்
உணவின் மிச்சங்களைப்போல்,
உன் நினைவுகளின் சொச்சங்கள்
என் ஞாபகத்தட்டில்
ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது!

மூளையின் முக்கால் பாகம்
செத்து விட்டாலும்
கால் பாகத்தில்....
கடந்தவைகளும்,
நடந்தவைகளும்
நிரடுவதால்−நான்
நிற்கிறேன்,நடக்கிறேன்
உண்கிறேன்....ஆனால்
உறங்க மட்டும் முடியவில்லை!

நீ என்னை உதறியதை
உணர்ந்துகொள்ள
மூளைக்கு
முழுதாய் ஒரு வினாடிதான் ஆனது,
இதயம் உணர இன்னும்
எத்தனை யுகங்கள் வேண்டுமோ....?