நிலவாக நீ

நிலவாக நீ
நிலவின் கறையாக நான்
உன் விழியெனும் சிறையில்
சிறைப்பட்டிருக்கும் என்னை
விடுதலை செய்யாதே
விரும்பியே அடைபட்டிருக்கும்
கூண்டுக்கிளி நான்....

நிலவினில் களங்கமில்லை
களங்கள் பல கண்டதால்
கலங்கிய துளிகளின்
இறுகிய திட்டு அது...

கூண்டுக்கிளி உன்னைக்
குண்டுக்கிளி ஆக்கி
விடமாட்டேன் என்
விழியெனும் சிறை
உனக்கு தற்காலிகமே

விழிச்சிறையினில்
இருந்து இதயச் சிறைக்கு
இடமாற்றும் நாள்
வெகுதொலைவில் இல்லை

உன் வாழ்க்கையே என்
அன்பு என்னும் சிறை
என் வாழ்க்கை உன்
அன்பு என்னும் சிறையல்லவா...

காதலுடன்
பார்த்திபன்

0 comments:

Post a Comment