லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! Experts Report!!!
திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது.
பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும். காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் லவ் மேரேஜ் செய்துகொண்டவர்கள் கூறும் அனுபவத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் திருமணத்தில் நமக்குப் பிடித்தவரையே திருமணம் செய்யலாம். இவரைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. ஆனால் அதில் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே செய்ய முடியும்.
காதல் திருமணத்தால் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தேவை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன்னதாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம். மேலும் மனதளவில் தெரிந்து கொண்டு, திருமணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில், நமக்கு துணையாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது.
காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்பதோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உருவாகும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் சொந்தங்களிடையே தான் செய்வோம்.
இவ்வளவு நன்மைகள் இருந்தால் காதல் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாகத் தான் அமையும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
0 comments:
Post a Comment