உங்கள் உறவு எப்படிப்பட்டது? தெரிந்துகொள்ள ஆவலா?
ஒருவரை காதலிக்கிறோம் என்றால், அந்த காதல் உறவு நல்லதா அல்லது கெட்டதா என்பதை விரைவில் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் காதல் வரும் போது, அந்த நேரத்தில் வெறும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். வேறு எந்த ஒரு எண்ணமும் மனதில் தோன்றாது.
ஏனெனில் காதலில் விழுந்தால், அந்த காதல் கண்ணை மறைப்பதோடு, சிந்திக்கும் எண்ணத்தையும் மறைத்துவிடும். அவ்வாறு மறைத்துவிடுவதால் தான், காதல் தோல்விகள் ஏற்படுகின்றன.
ஆகவே காதல் வந்துவிட்டால், உடனே கண்மூடித்தனத்துடன் நடக்காமல், நம் மீது அன்பை வைப்பவரின் ஒரு சில நடவடிக்கைகளை முன்பே சற்று பரிசோதிக்க வேண்டும். இதை தவறு என்று யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் காதல் தோல்வி அடைவதை விட, அவர்கள் நம் மீது வைத்துள்ள காதல் உறவு உண்மையானதா, நல்லதா என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிறகு மற்ற செயல்களில் ஈடுபட வேண்டும். இப்போது அந்த உறவு கெட்டதாக இருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!
* நீங்கள் காதலிக்கும் வாழ்க்கைத்துணை சுயநலத்துடன் இருந்தால், அவர்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லது. அதிலும் காதல் செய்யும் போது, அந்த காதல் கண்ணை ஆரம்பத்தில் மறைக்கும். ஆகவே ஆரம்பத்திலேயே நன்கு அலசி ஆராய்ந்து வந்தால், பிற்காலத்தில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. மேலும் சுயநலத்துடன் இருப்பவர்கள், எப்போதும் தன்னைப் பற்றி, தனக்கு பிடித்தது, பிடிக்காதது பற்றி தான் பேசுவார்கள். அவ்வாறு பேசுபவர்கள், பிற்காலத்தில் தனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுச் சென்று விடுவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே சுயநலம் இருந்தால் காதல் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதைப் புரிந்து, அத்தகையவர்களை தவிர்ப்பது நல்லது.
* நிறைய பெண்கள் தாம் காதலிக்கும் ஆண்கள் நாம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். இந்த செயல் ஒருசில நேரத்தில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒருவர் மற்றவரை எதற்கெடுத்தாலும் கட்டுப்படுத்துவதோ, எதை செய்தாலும் அனுமதி பெற்றுக் கொண்டு செய்வதோ இருந்தால், அந்த காதல் நீண்ட நாட்கள் நிலைக்காது. விரைவில் முறிந்து கொண்டு போகும். அதிலும் ஒரு அன்பான உறவில் இருவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். ஆகவே அத்தகைய நடவடிக்கையை உங்கள் வாழ்க்கைத்துணை மேற்கொண்டால், விலகிக் கொள்வது மிகவும் சிறந்தது.
* காதல் செய்யும் போது நன்கு ஊரைச் சுற்றி, மகிழ்ச்சியாக இருந்தப் பின்னர், சில நாட்கள் கழித்து, அவர்களுடன் நேரத்தை செலவழிப்பதை தவிர்ப்பதற்காக, மூன்றாம் மனிதரைப் போல் நடத்தினால், அத்தகையவர்களை விட்டு செல்வது சிறந்தது. ஏனெனில் அவர்களுக்கு உங்களது மதிப்பு நன்கு தெரியவில்லை. அத்தகைய மதிப்பு தெரியாதவர்களை எதற்கு நினைத்து வாழ வேண்டும். ஆகவே மதிப்பு இல்லாத, தெரியாத இடத்தில் இருக்க வேண்டாம்.
* உங்கள் துணை எப்போது உங்களை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறார்களோ, அப்போது உஷாராகிவிட வேண்டும். இது ஒரு கெட்டவிதமான உறவுக்கு அறிகுறி. ஆதிக்கம் என்பது வேறு, முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது வேறு. உதாரணமாக, இப்போது உங்கள் துணை நண்பர்கள், பேசுவது, பழக்கவழக்கம், உடை, உங்கள் நேரம் போன்றவற்றில் கட்டுப்படுத்தினால், அது ஒரு அழகான உறவுக்கு ஏற்படுத்தும் ஒருமாதிரியான அசிங்கம். கட்டுப்பாடு இருக்க வேண்டியது தான். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால், அவர்களைத் தவிர்ப்பது தான் நல்லது. வாழ்க்கை வாழ்வதற்கு தான். அதற்காக நம் விருப்பத்தை புதைத்துவிட்டு வாழ வேண்டிய அவசியம் இல்லையே.
* காதலிக்கும் வாழ்க்கைதுணையின் வாழ்க்கையில் 2-3 வெற்றியடையாத உறவுகள் இருந்தால், அதுவும் ஒரே காரணத்திற்காக தோல்வியடைந்தால், அப்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
ஆகவே மேற்கூறிய அனைத்தை நினைவில் கொண்டு, உங்கள் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து, சந்தோஷமாக வாழுங்கள்.
0 comments:
Post a Comment